News details

ரசிகர்களை உசுப்பேற்றிய போனி கபூர்

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை தான். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்த படம் வலிமை. முதலில் ரீமேக் படத்தின் மூலம் இணைந்தனர். ஆனால் தற்போது வினோத் இயக்குவது அவரது சொந்தக் கதை. இதன் காரணமாக அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதற்கு காரணம் வினோத்தின் முந்தைய படமான தீரன் அதிகாரம் ஒன்று தான். வழக்கமான போலீஸ் கதை இல்லாமல் வேறு ஒரு பணியில் இருந்ததால் அந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதேபோல் வலிமை படமும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளதாக வலிமை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கொடுத்த பேட்டியில், தல அஜித் பைக் ஸ்டண்ட் காட்சியில் டூப் போடாமல் நடித்ததை பார்த்து மிரண்டு விட்டேன் எனவும், 49 வயதில் அசால்டாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அசந்துவிட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வருகின்ற மே 1 ஆம் தேதி தல அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மே 1ஆம் தேதியை வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள்.