மணமேடையில் திருமண கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்..
மலையாளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். Aishwarya Rajesh The Great Indian Kitchen remake marriage shots ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண் படித்து பட்டம் பெற்று திருமணத்திற்கு பிறகு தனது கனவுகளை நனவாக்குகிறாரா ? இல்லையா ? என்பதை நோக்கிப் பயணிப்பது தான் இந்த திரைப்படம். திருமணத்துக்கு பின்னர் ஒரு சராசரி இந்திய ஆண் ஒரு நடுத்தர வர்க்கத்து மனைவியை எப்படி நடத்துகிறார். Aishwarya Rajesh The Great Indian Kitchen remake marriage shots அந்த குடும்பம் அந்த மருமகளை எப்படி பார்க்கிறது? அப்பெண்ணின் சுதந்திரம், சுயமரியாதை, உணர்வுகள் உள்ளிட்டவற்றுக்கு என்ன நெருக்கடிகள் வருகின்றன என்பதை எல்லாம் உணர்வுபூர்வமாக அணுகுகிற திரைப்படமாக மலையாளத்தில் வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் பல விதங்களில் பேசப்பட்டு பல விமர்சனத்துக்கு உள்ளானது. Aishwarya Rajesh The Great Indian Kitchen remake marriage shots இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கி தமிழில் இயக்குகிறார் ஆர் கண்ணன். இந்தப் படத்தில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மலையாளத்தில் நிமிஷா நடித்த அந்த கேரக்டர் பிரபலமாக பேசப்பட்டது. தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஏற்கனவே தொடங்கிய நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். Aishwarya Rajesh The Great Indian Kitchen remake marriage shots தமிழில் மாஸ்கோவின் காவிரி, தெலுங்கில் அந்தாள ராட்சசி உள்ளிட்ட படங்களின் மூலம் அறிமுகமான ராகுல் ரவீந்திரன் பாடகி சின்மயியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. Aishwarya Rajesh The Great Indian Kitchen remake marriage shots இந்த நிலையில் இந்த படத்தின் மைய கருவான, திருமண காட்சிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில் மணக்கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் இருக்கும் புகைப்படங்களை பார்க்க முடிகிறது