அல்சைமர் எனும் மறதி நோயால் பாதித்தவராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்

வில்லன் வேடங்களில் நடித்து வந்த பிரகாஷ்ராஜ் தற்போது குணசித்ர பாத்திரங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் தருகிறார். கன்னடத்தில் வெளியான ‘கோதி பன்னா சதஹர்னா மைகட்டு’ படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகிறது ‘60 வயது மாநிறம்’. இதில் அல்சைமர் எனும் மறதி நோயால் பாதித்தவராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். அவரை தேடும் மகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். மொழி பட இயக்குனர் ராதாமோகன் இயக்குகிறார். 

அவர் கூறும்போது,’மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு படம் திரையிடப்பட்டது.  படம் பார்த்த அதிகாரிகள் பாராட்டுதெரிவித்ததுடன் யூ சான்றிதழ் வழங்கினர். இம்மாதம் 31ம் தேதி ரிலீஸ்’ என்றார்.

Loading Facebook Comments ...