ஆசை நாயகியாக மாறியவர் மேகா ஆகாஷ்

#Vijay #Megha Akash
விஜய்-முருகதாஸுடன் இணைந்து சர்கார் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடந்து வருவதாக கடைசியாக படத்தை பற்றி கூறப்பட்டது.

தமிழில் சில படங்களே நடித்து மக்களின் ஆசை நாயகியாக மாறியவர் மேகா ஆகாஷ். இவர் தனுஷுடன் நடித்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

சமீபத்தில் இவர் படங்கள் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரிடம் விஜய்யுடன் நடித்துள்ளீர்களா என்று கேட்டதற்கு, ஆமாம் நடித்துள்ளேன் ஆனால் படத்தில் இல்லை, விளம்பரம் ஒன்றில்.

சின்ன காட்சியில் தான் வருவேன், அந்த படப்பிடிப்பில் விஜய் அவர்கள் மிகவும் அமைதியாகவே இருந்தார் என்றார்.

Loading Facebook Comments ...