இசையமைப்பாளர் அனிருத்தால் தற்கொலை முயற்சி செய்த இயக்குனர்- தற்போது அவரின் பரிதாப நிலை

பையா, பீச்சாங்கை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. இவர் இப்போது சோமபான ரூப சந்தரன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் சென்றுவிட்டதால் தற்போது அவரின் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது.

மேலும் படத்தில் ஒரு பாடலை அனிருத்தை பாட வைக்கலாம் என இசையமைப்பாளர் அப்பாஸ் ரஃபி உறுதியளித்துள்ளதால் அந்த நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்துள்ளார்.

ஆனால் இப்போது படு பிஸியாக இருப்பதால் அனிருத் பாட மறுத்துள்ளார், அடுத்த படத்தில் பாடுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் கேட்ட இயக்குனர் பொன்முடி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை உதவி இயக்குனர்கள் காப்பாற்ற இப்போது ஓய்வில் இருக்கிறார்.

இதுகுறித்து அவர், அனிருத் பாடவில்லை என்பதால் மனமுடைந்து சாக முடிவெடுத்தேன். ஆனால் எனது உதவியாளர்கள் என்னை காப்பாற்றிவிட்டனர். இப்போதும் எனது உடல் நிலை மோசமாக தான் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Loading Facebook Comments ...