சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து செய்த சூப்பரான சாதனை! லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பாக்ஸ் ஆஃபிஸில் பல படங்களை ஹிட் கொடுத்திருக்கிறார். உலகளவில் அவரின் நிறைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அடுத்ததாக அவரின் நடிப்பில் 2.0 படம் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. அதுவும் எப்படி, 2018 ல் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்ல 1991 ல் அவரின் தளபதி படம் தான் 100 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம் என்ற சிறப்பை பெற்றது. மேலும் 2007 ல் சிவாஜி படம் தான் 1000 க்கும் அதிகமான அதிகமான திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம் என்ற சிறப்பை பெற்றது.

Loading Facebook Comments ...