மெர்சல் படத்தை தொடர்ந்து சசிக்குமார் படம் செய்யவுள்ள சாதனை

விஜய் நடித்த மெர்சல் படம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரியும். இந்த படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என முன்பே அறிவிக்கபட்டது. வரும் மாதங்களில் அது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது சசிகுமார் நடித்துவரும் கென்னடிகிளப் படமும் சீன மொழியில் டப் செய்து வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது.

பெண்கள் கபடி பற்றிய இந்த படத்தின் சீன உரிமை 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Loading Facebook Comments ...